மதில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி
வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந் என்ற (வயது 13) சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
மதில் விழுந்து சிறுவன் ஒருவன் பலி
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment