மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி
இவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவரது இறப்புக்கான மரணம் கொரோனா தொற்று நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட, ராகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர், ராகம போதனா வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா மற்றும் மூளையில் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர், ராகம போதனா வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வவுனியாவைச் சேர்ந்த 52 வயது பெண்ணொருவரும் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா மற்றும் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment