மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு
  எம் உறவுகளுக்கு கை கொடுப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மடு பிரதேச செயலகப்பிரிவின் அமைதிபுரம் தட்சனாமருதமடு, கீரி சுட்டான் ஆகிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த முகாமைத்துவ பிரிவின் ஆலோசனைக்கு அமைவாகவும்  மடு பிரதேச உதவி செயலாளர் அவர்களின் உறுதிப்படுத்தலுடனும் குறித்த நிவாரணப்பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
  ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபா பெறுமதியான அரிசி,மா,பருப்பு,சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளடக்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளது 
குறித்த நிவாரணப்பணியின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் நிரோஜன் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள்   கிராமசேவையாளர்களும் இணைந்து  நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.
மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு
 Reviewed by Author
        on 
        
December 29, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 29, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 29, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 29, 2020
 
        Rating: 
















 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment