மன்னார் கேதீச்சரம் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்கு வெளிமாவட்டத்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை சிவராத்திரி விழா தொடர்பான சுகாதார ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்து மக்கள் சிவராத்திரி தினத்தில் ஆலயம் வருவதை தவிர்த்துக் கொள்வது நல்லது கடைகள் போடுவதற்கு அனுமதியில்லை பக்தர்களின் தேவை கருதி சுகாதார நடை மறைகளுடன் இரண்டு உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை பொதி செய்து கொண்டு வருவது நல்லது கேதீச்சர ஆலயத்திற்கு உள் நுழையும் பிரதான பாதைகளில் சுகாதார நடை முறைகளை பின்பற்றும் அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும் மேலும் வழமை போன்று அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் மேலதிக முடிவுகள் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும் அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் இணைச் செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் மன்னார் மாவட்டச் செயலக பதவிநிலை அதிகாரிகள் மன்னார் பிரதேச செயலாளர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் திருக்கேதீச்சர நிர்வாகத்தினரும் கலந்து கொண்டார்கள்.
மன்னார் கேதீச்சரம் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்கு வெளிமாவட்டத்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை சிவராத்திரி விழா தொடர்பான சுகாதார ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment