மன்னாரில் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு குளம் வைபவ ரீதியாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று திங்கட்கிழமை (08) காலை 10 மணியளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கே.திலீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டி மெல் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த திட்டம் சுமார் 8 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment