அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் இன்று (17) பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார். தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் இன்று தபால் மூலம் அனுப்பப்படவுள்ளது. 

 அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஏற்பாட்டுப் பிரிவை தொடர்புகொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 4,513 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சையில் 622,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் Reviewed by Author on February 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.