எகிப்தில் 5,000 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலை கண்டுபிடிப்பு
பியரை தயாரிக்க, தானியங்கள் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்தினார்கள். அந்த கலவையை சூடுபடுத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும், சுமார் 40 பாத்திர பண்டங்களைக் கொண்ட பல அலகுகளை இந்த கூட்டுக்குழு கண்டுபிடித்துள்ளது.
Supreme Council of Antiquities என்கிற அமைப்பின் கருத்துப்படி, இந்த பியர் வடிப்பாலை அரசர் நார்மரின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
, உலகிலேயே அதிக அளவில் பியர் ரக மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, மிகப் பழமையான வடிப்பாலையாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நார்மர் அரசர் 5,000 ஆண்டுகளுக்கு முன் இப்போதைய எகிப்து நாட்டில் ஆட்சி செய்தார். அவர் தான் எகிப்தை ஒருங்கிணைத்து முதல் சாம்ராச்சியத்தை நிறுவியவர் என கருதப்படுகிறது.
இந்த பியர் வடிப்பாலையில் 8 பெரிய பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளம் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் சுமாராக 40 மண் பாத்திர பண்டங்கள் வரிசையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன என எகிப்தின் Supreme Council of Antiquities அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தஃபா வசிரி கூறியுள்ளார்.
தானியங்கள் மற்றும் தண்ணீர் கலந்த கலவை பியர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த கலவை மட்பாண்டங்களில் சூடுபடுத்தப்பட்டது என்கிறார் அவர்.
எகிப்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பின் செய்யப்படும் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பியரை விநியோகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, இந்த வடிப்பாலை பாலைவனத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்
என இந்த ஆராய்ச்சியின் துணைத் தலைவர் மேத்யூ ஆடாம்ஸை மேற்கோள்காட்டி, எகிப்தின் சுற்றுலாத்துறை அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
பியர் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒரே நேரத்தில் 22,400 லிட்டர் பியர் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
எகிப்தில் 5,000 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலை கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
February 16, 2021
Rating:

No comments:
Post a Comment