670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கைது
 கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் படி கடந்த 06 ஆம் திகதி புத்தளம், செரக்குலிய கடற்கரையில் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு படகுகளினால் கடல் வழியாக கொண்டு வந்து கடற்கரையில் இறக்கப்பட்ட 34 பைகளில் அடைக்கப்பட்டுள்ள 670 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 
குறித்த இரண்டு படகுகளும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 முதல் 52 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் பல்லிவாசல்துரை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், உலர்ந்த மஞ்சள், படகுகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
670 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 03 சந்தேக நபர்கள் கைது
 Reviewed by Author
        on 
        
March 08, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 08, 2021
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 08, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 08, 2021
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment