மன்னாரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'நாடும் தேசமும் உலகமும் அவளே' எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு.
மன்னார் நகர சபை உறுப்பினர் சி.அந்தோனியம்மா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம வருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதி நிதிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், மாவட்டத்தில் பெண்களுக்கான முன்னெடுக்கப்பட வேண்டிய வேளைத்திட்டங்கள் தொடர்பாகவும்,பெண் பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குகொண்டு வந்தனர்.
மேலும் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்hட்டில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய 5 உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கி 20 பெண் பிரதிநிதிகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு கிறிசலீஸ் நிறுவனம் அனுசரனை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'நாடும் தேசமும் உலகமும் அவளே' எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு.
Reviewed by Author
on
March 08, 2021
Rating:

No comments:
Post a Comment