விபத்தில் ஒருவர் மரணம்
விபத்து இடம்பெற்ற இடத்தில் வயல் அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் பழுதடைந்த நிலையில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த போது அதற்கு இடமளித்து பயணிக்கும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை எம்.பி.சி.எஸ் வீதி மீராமுகைதீன் முஹம்மது மன்சூர் (வயது 39) என்ற குடும்பஸ்தரே உயிர் இழந்துள்ளவராவார்.
ஓட்டமாவடியை சேர்ந்த நாகூர் முகம்மது ஹனீபா என்பவரே காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இறந்தவரின் ஜனாஸா மருத்துவ பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக தேங்காய் ஏற்றி வந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் மரணம்
Reviewed by Author
on
March 06, 2021
Rating:

No comments:
Post a Comment