சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு பேரணி
விழிர்ப்புணர்வுக்கு என பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட ஊர்தியில் சமூகத்தில் பெண்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் பொறுப்புக்களை ஒப்பனை செய்தவாறும் பெண்கள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக மன்னார் நகரப்பகுதியை வந்தடைந்த குழுவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
குறிப்பாக பெண்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பெண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்ததுடன் பொது இடங்கள் மற்றும் பேருந்துகளிலும் காட்சிப்படுத்தினர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தினர் இளைஞர் யுவதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு பேரணி
Reviewed by Author
on
March 08, 2021
Rating:

No comments:
Post a Comment