மன்னார் மாவட்டம் 2 ஆவது நாளாகவும் முழுமையாக முடங்கியது-பொலிஸ்,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில்.
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை இன்று சனிக்கிழமை (15) 2 ஆவது நாளாகவும் முழுமையாக முடங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள 'கொரனா' வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர் வரும் திங்கட் கிழமை அதிகாலை 4 மணி வரை நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் 2 ஆவது நாளாகவும் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ளனர்.
மன்னார் நகரில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு  அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் மாத்திரம் நடமாட அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் வீதிகளில் நடமாடுபவர்களை இராணுவம் மற்றும் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு தேவை இன்றி நடமாடுபவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.
 மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்,அரச தனியார் போக்கு வரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவ மனைகள்  திறக்கப்பட்டுள்ளது.எனினும் மன்னார் மாவட்டம் மக்களின் நடமாட்டம் இன்றி 2 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை (15) முழுமையாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டம் 2 ஆவது நாளாகவும் முழுமையாக முடங்கியது-பொலிஸ்,இராணுவம் விசேட பாதுகாப்புக் கடமையில்.
 
        Reviewed by Author
        on 
        
May 15, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 15, 2021
 
        Rating: 


No comments:
Post a Comment