மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கஜிவத்தை பகுதியில் அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு தீ வைப்பு???
குறித்த பகுதியில் மாடு மாய்க்கச் சென்றவர்கள் தமது கையடக்க தொலைபேசியில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக முசலி பிரதேச சபையின் தவிசாளரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவிக்கையில்,,,
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கஜிவத்தை பகுதியில் அண்மைக்காலமாக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.
யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம் பெற்று வருகின்றது என்பது தெரியவில்லை.
அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகளை அழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கஜிவத்தை பகுதியில் அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு தீ வைப்பு???
Reviewed by Author
on
May 22, 2021
Rating:
Reviewed by Author
on
May 22, 2021
Rating:
















No comments:
Post a Comment