உலக பத்திரிகைச் சுதந்திர தினம்
உலகின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும், அதன் உண்மைத்தன்மை மாறாமல் உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப் படுத்துபவை பத்திரிகைகள் தான். அப்படிப்பட்ட பத்திரிகைகளை யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக செயல்பட விட்டால் தான் உண்மை செய்திகளை உலகம் பெற முடியும்.
இதன் அடிப்படையில் பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து1973ஆம் ஆண்டு மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது.மேலும் பத்திரிகையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிறது.
உலக பத்திரிகைச் சுதந்திர தினம்
Reviewed by Author
on
May 03, 2021
Rating:

No comments:
Post a Comment