அண்மைய செய்திகள்

recent
-

வீதியில் வீழ்ந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா..!

திடீர் சுகயீனமுற்று வீதியில் வீழ்ந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த நபருக்கு, கொரோனா தொற்றுள்ளமை பரிசோதனைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

 வென்னப்புவ − புஜ்ஜம்பொல பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புஜ்ஜம்பொல பகுதியில் நேற்றைய தினம் அவர் வீழ்ந்திருந்த நிலையில், 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவையின் உதவியுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் மீது பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வீதியில் வீழ்ந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா..! Reviewed by Author on May 03, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.