கொவிட் நோயாளிகளுக்கான ஒரு விஷேட உணவு முறை - ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ
வீட்டில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உணவில் சைவ அல்லது அசைவ உணவுகளைச் சேர்ப்பது முக்கியம் என மருத்துவர் கூறினார். இதனால் அவர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வளர்க்கவும் முடியும். உங்கள் உணவில் ‘விற்றமின் சி’ சேர்ப்பது மிகவும் முக்கியம். அத்துடன் 'விற்றமின் டி' யைப் பெற ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது சூரிய ஒளியில் இருப்பது அவசியம் என அவர் தெரிவித்தார்.
மேலும் முழுத் தானியங்களைச் சாப்பிடுவதும் தொடர்ந்து நீர் அருந்துவதும் மிக முக்கியம். அதிலும் சூடான நீர் சிறப்பு மிக்கது என்றார்.
மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்காக சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு அவர்கள் சுவாசிப்பதில் சிரமம் அல்லது பசியின்மை இருந்தால் பசியை ஊக்குவிக்கும், செரிமானத்தை எளிதாக்கும் மென்மையான உணவுகள் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
கொரோனரி இதய நோயுள்ள நோயாளர்கள் மிகச்சிறிய உணவை உட்கொள்வது அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திரவங்களை அருந்துவது சிறந்தது எனவும் மருத்துவர் ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொவிட் நோயாளிகளுக்கான ஒரு விஷேட உணவு முறை - ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ
Reviewed by Author
on
August 28, 2021
Rating:

No comments:
Post a Comment