யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!
இன்று (சனிக்கிழமை), யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், மதிப்பீட்டுக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் பேராசிரியர்கள் நியமனத்துக்கான தேவைப்பாடுகளை நிறைவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன.
குறித்த மதிப்பீடுகளின் படியும் தெரிவுக் குழுவின் சிபார்சின் அடிப்படையிலும் நான்கு பேரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பேரவை ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலையில் 2 இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!
Reviewed by Author
on
August 28, 2021
Rating:

No comments:
Post a Comment