அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கானில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தலிபான்களால் சுட்டுக்கொலை

உள்ளுர் சிறைச்சாலையில் பணியாற்றிய நெகர் எட்டுமாத கர்ப்பிணி என உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானில் மாகணமொன்றில் பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தலிபான்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். 

மத்திய கோர்மாகாணத்தின் தலைநகரமான பிரோஸ்கோவில் பனுநெகர் என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரை அவரின் வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் தலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ளனர் என சம்பவத்தை பார்த்தவர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அச்சம் காரணமாக பொதுமக்கள் தகவல்களை வெளியிட தயங்குகின்றனர் எனினும் கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சுவரில் இரத்தம் காணப்படும் படத்தையும் அறையின் மூலையில் சிதைவடைந்த சடலத்தையும் காண்பிக்கும் படங்களை வழங்கியுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. 

உள்ளுர் சிறைச்சாலையில் பணியாற்றிய நெகர் எட்டுமாத கர்ப்பிணி என உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை வீட்டிற்கு சென்ற தலிபான்கள் வீட்டில் உள்ளவர்களை கட்டிவைத்த பின்னர்குறிப்பிட்ட பெண் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.


ஆப்கானில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தலிபான்களால் சுட்டுக்கொலை Reviewed by Author on September 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.