நாட்டில் பல்வேறு இடங்களில் மின் தடைபட்டுள்ளது ! காரணம் இதோ
நாட்டில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன, தெரிவித்தார். கொத்மலையிலிருந்து பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
இதனால், பெரும்பாலான பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது
இதன்படி, மாத்தறை, குருநாகல், இரத்மலானை, பன்னிபிட்டிய, சபுகஸ்கந்த, அத்துருகிரிய, பியகம, கொட்டுகொட, ஜயவர்தனபுர, ஹபரண உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
நாட்டில் பல்வேறு இடங்களில் மின் தடைபட்டுள்ளது ! காரணம் இதோ
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment