அண்மைய செய்திகள்

recent
-

ATM கொள்ளை - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை பயன்படுத்தி சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். உரும்பிராயின் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போயிருந்த நிலையில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளது.

 இந்தச் சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவியுடன் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பான படங்களைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர். சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொதுமக்களின் உதவியைக் கோருவதாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் கேட்டுள்ளார். குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071 8 591 329 என்ற அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ATM கொள்ளை - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை Reviewed by Author on November 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.