அண்மைய செய்திகள்

recent
-

சித்தப்பா தாக்கி உயிரிழந்த சிறுமியின் உண்மை கதை!

கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தந்தை மற்றும் சிற்றப்பாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கம்பளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், உறவின பெண் ஒருவரின் காதல் விவகாரத்திற்காக உதவி புரிந்தமைக்காக சிறுமியின் சிற்றப்பா அவரை தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

 கடந்த 13ஆம் திகதி கம்பளை அங்கம்மனையில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு குறித்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். சித்தப்பாவின் மகள் மற்றும் தாயாரின் துணைக்காக குறித்த சிறுமி இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சில நாட்கள் அங்கு இருந்த அவர், கடந்த 19ம் திகதி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து அவர் பல முறை வாந்தி எடுத்துள்ளார். மேலும் சித்தப்பா தன்னை அடித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார். குறித்த சிறுமி தனது சித்தப்பாவின் மகளின் காதல் விவகாரம் குறித்த தகவலை மறைத்ததாக கூறப்படுகிறது. 

 பின்னர் கடந்த 21ஆம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அன்று காலை சிறுமியின் தந்தையும் அவளைத் தாக்கியுள்ளார். பின்னர், பிரதேசவாசிகள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும் தந்தை அதற்கு அனுமதிக்காததால் அன்று பிற்பகல் 2 மணி அளவில் சிறுமி வீட்டில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். 

 சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நீதவானிடம் கருத்துத் தெரிவிக்கையில், “அக்கா புலம்புவதாக தெரிவித்து அதிகாலை 2 மணிக்கு அப்பா அக்காவை அடித்தார். கால் பகுதிக்கு தாக்கினார். பின்னர் அக்கா அறைக்கு சென்று தூங்கினார். பின்னரும் புலம்பியதால் அக்காவை வௌியே கொண்டு வந்த விட்டார். அப்பா கொஞ்சமாக குடிந்திருந்தார்´´. அம்மாவும் அப்பாவும் ஏன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை? “வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை, பக்கத்தில் இருக்கும் மாமி வீட்டுக்கு அம்மா அழைத்துச் சென்றார். அங்கு அக்கா பயந்துள்ளதாக அவர் கூறினார். இன்று மாலை மூச்சித்திணரல் வந்ததால் வைத்தியாசலைக்கு அழைத்துச் சென்றோம். அப்போதே அவர் உயிரிழந்து விட்டார்´´.


சித்தப்பா தாக்கி உயிரிழந்த சிறுமியின் உண்மை கதை! Reviewed by Author on December 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.