வௌ்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ் விபத்து; சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு
நேற்று(10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 08 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
அவர்களில் கிளிநொச்சி, அனியங்குளம் பகுதியை சேர்ந்த 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ் சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வௌ்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ் விபத்து; சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 11, 2021
Rating:
No comments:
Post a Comment