வளம் நிறைந்த காரைநகர்
செல்லும் வழியில் கடற்கரை தோறும் மணற் குன்றுகளையும் சவுக்கு, தாழை, இராவணன் மீசை முதலான செடிகள் நிறைந்த ஓரங்களும் தென்னை, பனை முதலான சேலைகளும் எம்மை வரவேற்றாற் போல காட்சியளித்தன. பெருந்தரைப் பாகத்தில் தரிசு நிலங்களும் தரைவை நிலங்களும் உண்டு.
எனினும் திரும்பும் திசை எங்கும் பச்சைப் பசேலென பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் காட்சியளித்தன.
வெளிகள் யாவும் பரந்த வயல்களாக காட்சியளிக்கும் மழை காலத்தில் மாத்திரம் இங்கு நெல் விளைவிப்பர். சிறுபோகமாக இக் பகுதியில் எள்ளு, கத்தரி, குரக்கன், வெள்ளரி பயிரிடப்படுவதுடன் ஆங்காங்கே சணலும் விதைக்கப்படுகிறது.
கேணி, குளம், குட்டை என்பவற்றை எங்கும் பார்க்க முடிந்தது. மேலும் ஆழம் குறைந்த கிணறுகள் இருந்தாலும் நன்னீர் கிணறுகள் குறைவு.
மூலை முடுக்கெல்லாம் தெருக்களுக்கு பெருந் தெருக்களுக்கும் கையொழுங்கைகளுக்கும் குறைவே இல்லை. கட்டிடங்களின் வரிசை கூடிக்கொண்டே செல்கிறது. கோயில்களுக்கும் குளங்களுக்கும் குறைவே இல்லை. தெருவுக்கொரு கோயில் என்னும் வகையில் பல கோயில்களும் உள்ளன.
இப் பகுதியில் முதல் முதலில் எமது பார்வைக்கு எட்டிய விடயம் காரைநகரின் தொன்மை பெருமை என்பவற்றை எடுத்தியம்பும் அறிவாலயம் நூலகம்.
காரைநகரின் முக்கிய வருவாய் மூலங்களில் ஒன்றாக திகழும் கசூரினா கடற்கரைக்கு சென்று அதன் அருமை பெருமைகளை அறிந்து கொண்டேன் தொடர்ந்து முருகைக்கற்பாறைகள் நிறைந்த கோவளம், வெளிச்சவீடு என்பவற்றையும் பார்வையிட்டு அதன் பின்னணி, வரலாறு, தன்மைகளை அறிந்தேன்.
பின்னர் இங்கு வாழும் மக்களின் வருமான மூலங்களில் ஒன்றாக திகழும் கடற்தொழில் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடும் கடற்கரைக்கு சென்று அவர்களின் வாழ்வாதாரம், வருமான மட்டம், பருவகால தொழில் நடவடிக்கைகள் என்பன பற்றி அறிந்தோம்.
தொடர்ந்து இங்குள்ள பெண்களின் வருவாய் மூலங்களில் ஒன்றாக திகழும் யாழ்ப்பாணத்தின் முத்தாக கருதப்படும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெண் ஒருவரை சந்தித்து அவர்களின் உற்பத்தி தொடர்பில் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.
அவரது உற்பத்திகள் எம்மை வியப்பில் ஆழ்த்;தவே செய்தன. தமிழர்களின் பாரம்பரிய உற்பத்திகள் மற்றும் தற்காலத்தில் ஏற்றுமதி செய்யக்கூடிய நவீன உற்பத்திப்பொருட்கள் கூட அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தாம் நவீன உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து தேனீ வளர்ப்பில் ஈடுபடும் ஒரு இளைஞனின் வீட்டிற்கு சென்றேன். பலரும் ஆடம்பரம் மற்றும் நவீன மயத்துடன் வாழும் சூழலில் இயற்கையுடன் ஒன்றி வாழும் அவர்களின் முயற்சியையும் அதை ஒரு வருமான மூலமாக பயன்படுத்தும் வாழ்வாதாரமும் எம்மை சிந்திக்கத் தூண்டியது.
மேலும் நாம் அடுத்து சந்தித்த நபரான ஓய்வுபெற்ற கிராமசேவகர் ஜயப்பிள்ளை நடேசன் ஒரு இயற்கைப்பிரியர்.
அவர் தனக்கு சொந்தமான காணியில் புதினா, பொன்னாங்கன்னி, எள்ளு, வல்லாரை, அசோலா, மிளகாய், பாகல், பயிற்றங்காய், கத்தரி, தூதுவளை, குறிஞ்சா, முருங்கை, சண்டி, மொசுமொசுக்கை, வெங்காயம், சீனி வத்தாளை, கயூ, கௌப்பி, முள்ளங்கி, பூசணி, நெல் முதலான உணவிற்கான மற்றும் மருத்துவ ரீதியான பயிர்களை உற்பத்தி செய்வதாகவும் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துவராகவும் மண்புழு வளர்ப்பில் ஈடுபடுவதுடன் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு மூலமாக உவர்நீரை நன்னீராக மாற்றும் முயற்சி என்பன இப் பகுதி மக்களின் இயற்கையுடனான ஒன்றிப்பைக் காட்டியது.
அத்துடன் நாம் இங்கு இனம்கண்ட முக்கிய பிரச்சினைகளாக நன்னீர் குறைபாடு, சந்தை வசதியின்மை என்பவற்றை குறிப்பிட முடியும்.
இப் பகுதியின் பிரதான வருமான மூலங்களாக கசூரினா கடற்கரை மற்றும் கோவளம் வெளிச்சவீடு என்பன அமைவதுடன் 2 பொதுச்சந்தை, 2 விளையாட்டு மைதானம், 11 பொதுக் கிணறுகள், 16 குழாய்க்கிணறுகள் 12 முன்பள்ளிகள் 14 பாடசாலைகள் என்பன காணப்படுகின்றன. இது 2295 ஹெக்ரயர் பரப்பளவைக் கொண்ட யாழ்பப்hணத்தில் மிகப்பெரிய தீவு ஆகும்.
காரைநகரின் பொருளாதாரத்தை நோக்கும் போது இப் பகுதியை சேர்ந்;த பலர் யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல நகர்களிலும் வாழ்கின்றனர். ஒரு பக்கத்தில் வர்த்தகம், கல்விசார் தொழில் துறைகளில் சிறந்து விளங்குகின்ற போதும் இன்னொரு பக்கத்தில் வருமானம் குறைந்த குறிப்பிடத்தக்க வறிய மக்களும் காணப்படுகின்றனர்.
மேலும் இப் பகுதியில் பல்வேறு வருமான வழிமுறைகளை மக்கள் கைக்கொள்கின்றனர்.
பல்பொருள் வாணிபம், சிறுபொருள் வாணிபம், அரைக்கும் ஆலை, அழகுசாதனப் பொருள், யூஸ் உற்பத்தி மற்றும் விற்பனை, வாடகைப் பொருள் வியாபாரம், கடற்தொழில், ஐஸ் உற்பத்தி, நடமாடும் வியாபாரம், ஓட்டுத்தொழில், கருவாட்டு உற்பத்தி, தேனீரகம், படப்பிடிப்பு, வாகன திருத்துமிடம், கூலி;த் தொழிலாளர்கள், சிகை அலங்கரிப்பு, கல் மண் அரிகல் தொழிலகம், தச்சு தொழிலகம,; தொலைத் தொடர்பகம், எரிபொருள் நிரப்பு நிலையம், வைத்தியமும் மருந்தகமும், இலத்திரனியல் உபகரண திருத்துமி;டம், கூட்டுறவு சங்கம், தையலகம், வெதுப்பகம், கல்விச்சேவை, மின் உற்பத்தி. நீர்க்குழாய் பொருத்துதல், கல் உற்பத்தி, ஒலிபெருக்கி, மின்னியல் உபகரணங்கள், கால்நடை வளர்ப்பு , புத்தகசாலை , ஊதுபத்தி உற்பத்தி, திரவ சவர்க்கார உற்பத்தி என பல்வேறு பொருளாதார மார்க்கங்கள் இப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமைகின்றது.
2019 இல் கமநல உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. காரைநகருக்குள் நுழையும் போது முதலில் தென்படுவது பேருந்து தரிப்பிடத்திற்கு எதிரே காணப்படும் இவ்உணவகம் தான். காலை 6.45 – மாலை 7.00 மணிவரை திறந்திருக்கும்.
அம்மாச்சி உணவகத்தைப்போலவே ஆரோக்கியமான உணவு வகைகளை இங்கு காணலாம். தோசை, இடியபப்ம், பிட்டு, அப்பம், பற்றிஸ,; றோல், வடை, ஆட்டாமா றொட்டி, பூரி போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர மாம்பழம், விளாம்பழம,; அப்பிள், அன்னாசி யூஸ் வகைகளும் வழங்கப்படுகின்றன. 4 பெண் வேலையாட்களும் ஒரு மேற்பார்வையாளரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் சாதிய மற்றும் பொருளாதார ரீதியான வேறுபாடுகள் இப் பகுதி மக்களால் அதிகமாக பின்பற்றப்படுவதையும் அறிய முடிந்தது.
இங்கு உவர் நீரே அதிகளவாக பரவியுள்ளது. 3574 வாழும் இப்பகுதியில் குழாய்க்கிணறுகள் 14 உம் பொதுக்கிணறுகள் 18 உம் காணப்படுகின்றன. இருப்பினும் இங்கு வாழும் மக்கள் குடிநீருக்காக முற்றுமுழுதாக வெளிப்பிரதேசங்களை நாடியே உள்ளனர்.
பவுஸர்கள் மூலம் தண்ணீர்தாங்கிகளிலே அடிக்கப்படும் நீரையும், போத்தல்களிலே அடைக்கப்பட்ட குடிநீரையும் நம்பியே அவர்களின் வாழ்க்கை நகர்ந்து செல்கிறது. குடிநீர்ப்பிரச்சினை காரணமாக தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாத நிலையும் கால்நடைகளை வளர்க்க முடியாத நிலையும் வேளாண்மை செய்ய முடியாத நிலையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்;ளது. குடிநீர்ப்பிரச்சினைக்குப் பிரதான காரணங்களாக உவர்நீர்ப்பிரச்சினை மற்றும் குடிநீர் கிணறுகளின் பற்றாக்குறை மக்கள் முன்வைக்கின்றனர். இவற்றில் முக்கிய காரணமாக கூறப்படுவது குடிநீர் கிணறுகளின் பற்றாக்குறையே. காரணம் சாதியப் பிரச்சினை.
குடிநீர் கிணறுகள் இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக மேல் சாதியினர் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் கீழ்ச்சாதியினருக்கு நீரைக் கொடுக்கக்கூடாது என்பதற்காகவும் கிணறுகளை மூடி வைத்துள்ள நிலையும் காணப்படுகிறது. இதனால் அக் கிணறுகள் பாவிக்கமுடியாத நிலையை அடைந்துள்ளன. கோடைக்காலம், மாரிக்காலத்திற்கேற்பவும் நீரின் விலை மாற்றமடைகின்றது. குடிநீர் அவசரமாக தேவைப்படுபவர்களுக்கும் மற்றும் காசு கொடுத்து நீரைப்பெற முடியாதவர்களுக்கும் சலுகையாக, இலவசமாக நீர் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதனை காரை அபிவிருத்தி சபை அந்தக்கிராமத்திலுள்ள பொறுப்பான ஒருவரிடம் கொடுத்து அவர் மூலம் வறிய மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறாக காரைநகரின் பயணமானது ஒரு புதிய அனுபவத்தைத் தந்துள்ளது.
சங்கீர்த்தனா புலேந்திரன்
நான்காம் வருடம்
ஊடகக் கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வளம் நிறைந்த காரைநகர்
Reviewed by Author
on
December 09, 2021
Rating:
No comments:
Post a Comment