அண்மைய செய்திகள்

recent
-

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சிலாவத்தை சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றுள்ளது!

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தின் கீழ் நிதி அமைச்சின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்காக 28வீத அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானிய தொகை வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நேற்று முதல் இடம்பெற்று வருகின்றது.

 அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சமுர்த்தி பயனாளிகளுக்கான அதிகரிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(15) கரைதுறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை சமுர்த்தி வங்கியில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார். 

மேலும் இது போல மாவட்டத்தின் ஏனைய சமுர்த்தி வங்கிகளிலும் குறித்த கொடுப்பனவுகள் வழங்கும் செயற்பாடுகள் நேற்றிலிருந்து பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி தற்போதுவரையில் மூவாயிரத்து 500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, நான்காயிரத்து 500 ரூபா கொடுப்பனவும், 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, 3,200 ரூபா கொடுப்பனவும், ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு, ஆயிரத்து 900 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மு.முபாரக், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், நுண்நிதிப் பிரிவு முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

மாவட்ட ஊடகப் பிரிவு, 
மாவட்ட செயலகம்,
 முல்லைத்தீவு








அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சிலாவத்தை சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றுள்ளது! Reviewed by Author on February 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.