முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு
பாடசாலை முடிந்த பின்னர் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் பெண்கள் வீதியில் செல்லமுடியாத நிலை என்றும் 400 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் 250 ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் மத்தியில் ஜஸ்,கெரோயின்,கஞ்சா அதிகமாக காணப்படுகின்றது
பொலீசில் முறைப்பாடு செய்தும் எந்த பயனும் இல்லை துஸ்பிரயோகம் அற்ற கிராம மாக எங்கள் கிராமம் காணப்படவேண்டும். அரசாங்கம் வாக்கினை கேட்பவர்கள் என்ன செய்கின்றார்கள்?போதைப்பொருள் பாவனையால் பெண்கள் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள் குடும்பத்தில் பிரச்சினையினை ஏற்படுகின்றது சிறு பிள்ளைகளை இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
எனவே கிராமத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு
Reviewed by Author
on
June 08, 2022
Rating:

No comments:
Post a Comment