வெளிநாடுகளில் இருந்து இலவசமாக பொருட்களை அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் சுருட்டும் கும்பல்
அதனை தொடர்ந்து இலங்கைக்கு குறித்த பரிசு பொருள் வந்து விட்டதாகவும் அதை பெற்று கொள்ள கட்டு நாயக்க விமான நிலையத்தில் வேலை செய்யும் ஒரு நபருடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து இலங்கை தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்குவார்
அந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்போது அந்த நபர் உங்களுக்கு ஒரு பரிசு பொதி வந்துள்ளது என தெரிவிப்பார் அதற்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா உடனடியாக தான் வழங்கும் கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு கூறுவார் இதனை நம்பி பலர் அந்த கணக்கில் வைப்பில் இட்டதும் அந்த வெளிநாட்டு நபர் மற்றும் இலங்கை நபர்களின் தொலைபேசியும் வேலை செய்யாமல் போய்விடும் வங்கியில் இட்ட பணமும் சுருட்டப்படும்
இவ்வாறான ஏமாற்று கும்பலால் இலங்கையில் பலர் ஏமாந்துள்ளனர் என்னமும் பலர் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர்
இதே போன்று அண்மைகாலமாக குறைந்து விலையில் ஐபோன்,கமராக்கல்,பைக்குகள் விற்பனைக்கு உள்ளதாகவும் உடனடியாக முற்பனம் செலுத்தினால் வீடுக்கே கொண்டு வந்து வழங்குவதாகவும் கூறி முற்பனத்தை பெற்று மோசடி மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது
மேலும் சீட்டிலுப்பில் பல கோடி பணப்பரிசு கிடைத்துள்ளதாகவும் அப்பணத்தை விடுவிக்க ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும் என கூறி பணம் பறிக்கு செயற்பாடுகளும் இலங்கையில் இடம் பெற்று வருகின்றது
எனவே மக்கள் இவ்வாறான மோசடி கும்பளகளிடம் அவதானமாக இருப்பதுடன் இவ்வாறான நபர்களுக்கு உங்கள் சார்ந்த தகவல்களை வழங்குவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்பதுடன் இணைய வழி ஊடாக பொருட்கள் வாங்குவது பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு இணைய வழி பண பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்கவும்
வெளிநாடுகளில் இருந்து இலவசமாக பொருட்களை அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் சுருட்டும் கும்பல்
Reviewed by Author
on
September 08, 2022
Rating:

No comments:
Post a Comment