இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் முழுதும் பொருத்தப்பட்டது
குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுவேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், 'வெண்டிங் மிஷின்' எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார். இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன.துபாயின், 'அஸ்வாக்' மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், அரபி ரொட்டி மற்றும், 'பிங்கர் ரோல்' ஆகிய இரண்ட வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன.இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் முழுதும் பொருத்தப்பட்டது
Reviewed by Author
on
September 21, 2022
Rating:

No comments:
Post a Comment