பெண்ணொருவரை காப்பாற்ற சென்ற நபர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
இதன்போது அந்த பகுதியிலிருந்த வீடொன்றில் வசிக்கும் இருவர், கீழே வீழ்ந்த பெண்ணை பிடிக்க முயன்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணுடன் வந்த மற்றைய நபர் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திருகோணமலை – மூதூர், பாரதிபுரம் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
50 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நபரொருவரை கேலி செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
48 வயதான ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவரை காப்பாற்ற சென்ற நபர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
Reviewed by Author
on
September 21, 2022
Rating:
-468832.jpg)
No comments:
Post a Comment