அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உடன் துரிதப்படுத்தவும்-செல்வம் அடைக்கலநாதன்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் தினேஸ் குணவர்த்தன விடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை(31) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறு நான் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இது கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேற்குறிப்பிட்ட விடயத்தில் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட சாதகமான முடிவு அனைவராலும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது.இந்த முடிவு இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில் இந்த தீர்வை நான் சரியானதாகவே பார்க்கிறேன். இந்த முடிவை உடனடியாக அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது




.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உடன் துரிதப்படுத்தவும்-செல்வம் அடைக்கலநாதன் Reviewed by Author on October 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.