அண்மைய செய்திகள்

recent
-

தரமற்ற அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கான சட்டங்கள் அமுல்படுத்தப்படாமையால் நச்சு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தோல் மருத்துவ நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவு செய்யப்படாத தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட உற்பத்திகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அவர் பொதுமக்களை பரிந்துரைத்துள்ளார். 

 மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் நுழைவதை நிர்வகிக்கும் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பல பொருட்களால் தோலை அதிகமாக கழுவினால், நல்ல பக்டீரியாக்கள் அழிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரமற்ற அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை Reviewed by Author on November 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.