யாழில் 11 மாதங்களேயான குழந்தை சளி காரணமாக உயிரிழப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 11 மாதங்களேயான குழந்தை சளி காரணமாக உயிரிழந்துள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இன்று அதிகாலை முட்டு இழுத்ததன் காரணமாக பெற்றோரால் காரைநகர் வலந்தலை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் குழந்தை உயிரிழந்துள்ளது
மரண விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
யாழில் 11 மாதங்களேயான குழந்தை சளி காரணமாக உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 01, 2022
Rating:

No comments:
Post a Comment