மன்னார் பேசாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்- பேசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு.
இவருடன் மேலும் இரண்டு மீனவர்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் கடலுக்குள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இவர்களது தொழிலை மேற்கொள்ளும் டோலர் படகின் பிரதான வலை கிழிந்த நிலையில் அதை சீர் செய்து மீண்டும் தொழிலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் மேற்கொண்ட தொழிலில் மீன்பாடு இல்லாத நிலையில் இரவு சுமார் 9.30 மணி அளவில் பேசாலை கரைக்கு திரும்பி கடற்கரைக்கு சற்று தொலைவில் படகை நங்கூரமிட்டு குறித்த 3 நபர்கள் நீந்தி கரைக்கு வந்து உள்ளனர்.
இதன் போது ஒருவர் தாமதமாகியும் கரைக்கு வராத நிலையில் காணாமல் போய் உள்ளார்.
குறித்த நேரத்தில் அவரை தேடிய மற்றைய இரண்டு மீனவர்களும் உரிமையாளரிடம் முறையிட்டு பேசாலை போலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபரின் சடலம் இன்று திங்கட்கிழமை (23) காலை பேசாலை மீன்பிடி துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவருடன் தொழிலுக்கு சென்ற இரண்டு நபர்கள் மற்றும் அவரது மனைவி, உறவினர், தொழில் உரிமையாளர் ஆகியோரிடம் பேசாலை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்- பேசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு.
Reviewed by Author
on
January 23, 2023
Rating:

No comments:
Post a Comment