பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்'- மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
இதன் போது பெண்களால் பறை இசை ஒலிக்கப்பட்டு பெண்கள் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாடல்கள் இசைக்கப்பட்டது.
மேலும் மன்னார் பிரதான நகர சுற்று வட்டத்தின் ஊடாக ஊர்வலமாக சென்று பெண்ணியம் சார்ந்து வரையப்பட்டிருந்த சுவர் ஓவியங்களைப் பார்வையிட்டனர்.
அத்துடன் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம், வன்முறைகளில் இருந்து விடுதலை பெற சமூகங்களுக்காக ஒன்றிணைவோம், முதலாளித்துவத்தின் நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுதலை பெறுவோம் என எழுச்சி கொள்வோம், பூமிக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர எழுச்சி கொள்வோம், எனும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னாரில் உள்ள பெண்கள் நலன் சார்ந்த அமைப்பின் தலைவிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்'- மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
Reviewed by Author
on
February 14, 2023
Rating:

No comments:
Post a Comment