அண்மைய செய்திகள்

recent
-

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி பலி

மட்டக்களப்பு - தொப்பிகலயில் வயல் காணியில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடமிருந்து நெற்செய்கையை பாதுகாக்க சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியிலேயே இந்த சட்டவிரோத மின்வேலி இடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். எனினும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சட்டவிரோத மின்வேலியில் சிக்கி மணிவாசகர் நகரை சேர்ந்த 53 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் குறித்த வயலில் காவலாளியாக தொழில்புரிந்து வந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி பலி Reviewed by Author on February 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.