அண்மைய செய்திகள்

recent
-

லொத்தர் பரிசு தொடர்பில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

லொத்தர் சீட்டில் பரிசு விழுந்ததாக தெரியாதவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தால் அது நிச்சயமாக பொய்யும் மோசடியுமாகும் என இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

 இவ்வாறான மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. லொத்தர் பரிசு தொடர்பில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை | Lottery Prize Fake Call Central Bank Sri Lanka மேலும், பணம் வைப்பு செய்யப்பட்ட/ வைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், சம்பந்தப்பட்ட வங்கி, கைத்தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களுடன் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லொத்தர் பரிசு தொடர்பில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை Reviewed by Author on March 01, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.