வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு- பா.உ கு திலீபன் தெரிவிப்பு.
வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளத்தின் வயல் நிலங்களுக்கு சீரான தண்ணீர் வரத்து இல்லாமையினால் பல ஏக்கர் காணிகள் விதைக்கப் படாமல் இருந்து வருகின்றன.
சமீபத்தில் வவுனியாவில், நீர் பாசன அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பினை சரியாகப் பயன்படுத்தியதால் 404 மில்லியன் ரூபாய் கால்வாய் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இக்கால்வாய் 8 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.இதனால், 950 ஏக்கர் நிலம் பயன்படும் என்று கமக்கார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நீர்ப்பாசன திணைக்கள வவுனியா மாவட்ட பொறியியலாளர் மற்றும் உத்தியோ கத்தர்களுடன் நேரில் சென்று கமக்கார அமைப்பினரை சந்தித்து திட்டம் தொடர்பாக தெரிவித்தோம்.
மேலும் 10 குளங்களை புனரமைப்பதற்கான அனுமதி பெற்றுக் கொண்டோம். அதற்கான நிதியும் விரைவில் கிடைக்கப் பெறும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு- பா.உ கு திலீபன் தெரிவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 16, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 16, 2023
Rating:









No comments:
Post a Comment