மன்னார் பரப்பாங்கண்டல் இரட்டை மாட்டு வண்டி திடலில் சிறப்பாக இடம்பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி
புத்தாண்டையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை (15) மாலை மன்னார் பரப்பாங்கண்டல் இரட்டை மாட்டு வண்டி திடலில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தது.
குறித்த போட்டியானது A,B,C,D,E ஆகிய 5 பிரிவுகளில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற காளை களின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Video link https://youtu.be/zrk82otiUJI
மன்னார் பரப்பாங்கண்டல் இரட்டை மாட்டு வண்டி திடலில் சிறப்பாக இடம்பெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி
Reviewed by NEWMANNAR
on
April 16, 2023
Rating:

No comments:
Post a Comment