தாயகத்திக்கு விழாவிற்காக வந்த பெண் பரிதாப உயிரிழப்பு; சடலம் ஜேர்மனிக்கு!
கடந்த 3 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த பெண் தனது உறவினருடன் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டினை இழந்து அளம்பில் பகுதியில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
மகளின் பூப்புனித நீராட்டுவிழா
உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு எதிர்வரும் தினங்களில் பூப்புனித நீராட்டுவிழா செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டது.
நீண்டகாலமாக குறித்த பெண் ஜேர்மனியில் வசித்துவந்த நிலையில் கணவர் மனைவியின் உடலை ஜேர்மனிற்கு எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மகளின் பூப்புனித நீராட்டுவிழா நடத்த தாயகம் வந்த பெண், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
April 07, 2023
Rating:


No comments:
Post a Comment