மட்டக்களப்பில் இரு வீடுகள் உடைத்து கொள்ளை!
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பூட்டியிருந்த இரு வீடுகளை உடைத்து அங்கிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஜி.பி.எம்.எம். ஜெசூலி முகமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெல்லாவெளி கமலநசேவைகள் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த 4 பவுண் ஆபரணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இரு வீடுகள் உடைத்து கொள்ளை!
Reviewed by Author
on
July 07, 2023
Rating:

No comments:
Post a Comment