ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ முடியாது – பொன்சேகா
ஊழல் அற்ற நாட்டில் மக்களுக்கு வாழும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஊழலுடன் தொடர்புடைய ஒருவரை திருடர் என கூறும் அளவுக்கு நாட்டு மக்களுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் என கூறினாலும் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாற்றத்தை விரும்பும் தலைவர்களை அடையாளம் காணுவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஊழலை ஒழிக்காமல் நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
August 13, 2023
Rating:


No comments:
Post a Comment