நீதிமன்றில் ஆஜராகுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பானை.
முல்லைத்தீவு
நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை
ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிசார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
நீதிமன்றில் ஆஜராகுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பானை.
Reviewed by Author
on
September 12, 2023
Rating:
Reviewed by Author
on
September 12, 2023
Rating:


No comments:
Post a Comment