மாதாவின் சிலையில் இரத்தக் கண்ணீர் கசியும் அதிசயம்
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சிலையில் கண்களில் இரத்தச் கசியும் அதியசயம் நிகழ்;ந்துள்ளது.
இதனை அறிந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹடட்டன் திருச்சிலுவை ஆலயத்திற்கு வருகை தந்து மாதா சிலையினை தரிசித்து இரவு பகலாக வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த மாதா சிலை ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள கிறிஸ்த்தவ வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
குறித்த மாதா வழிபடுவதற்காக சிறுவன் ஒருவன் சென்ற போது மாதா சிலையிலிருந்து இரத்தம் கசிவதை கண்டு தாயிடம் கூறியுள்ளார்.
அதனை பார்த்த தாய் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களிடம் அறிவித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு சென்ற பங்கு தந்தை சிலையினை பார்வையிட்டு அங்கு மக்கள் அதிகரித்ததனால் அந்த சிலையினை கொண்டு வந்து மக்களின் தரிசனத்திற்காக தற்போது ஹட்டன் திருச்சிலுவை ஆலுயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் தெரிவித்தார்.
குறித்த காட்சியினை பார்வையிடுவதற்கு ஹட்டன் மற்றும் பிற பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இரவு பகலாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் குறித்த ஆலயத்திற்கு ஹட்டன் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
September 12, 2023
Rating:




No comments:
Post a Comment