யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்!
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப் பிரசுர விநியோகம் இன்று (22) மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களை மையப்படுத்தியும் , மன்னார் நகர பகுதியிலும் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
நேற்று (21) மற்றும் இன்றைய தினம் (22) வடக்கு தழுவிய ரீதியில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்!
Reviewed by Author
on
September 22, 2023
Rating:

No comments:
Post a Comment