மன்னாரில் 39 வது தேசிய மீலாதுன் நபி விழா- ஜனாதிபதி பங்கேற்க்கவுள்ளார்
மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான மீளாய்வுக் கூட்டம் இன்று (22) காலையில் நடைபெற்றது
மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் நடைபெற்ற முன்னாயத்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை.பரந்தாமன் தலைமையில் இவ்விழா சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் இன்றும் (22) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மன்னாரில் நடைபெற இருக்கும் 39 வது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை முன்ன எவ்வாறு இவ்விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது
குறித்த நிகழ்வானது 9 வது தேசிய மீலாத்துன் நபி முசலி பிரதேச செயலகப் பிரிவில் சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் நடைபெற இருக்கும் இவ் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய முன்னேற்பாடுகள் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் சிவராஜ் , தொடர்புடைய சகல திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் 39 வது தேசிய மீலாதுன் நபி விழா- ஜனாதிபதி பங்கேற்க்கவுள்ளார்
Reviewed by Author
on
September 22, 2023
Rating:
Reviewed by Author
on
September 22, 2023
Rating:



No comments:
Post a Comment