மொஹமட் இம்ரான் கான் இந்தியாவில் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் இம்ரான் கான் என்ற சந்தேக நபர் இந்திய தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டின் இராமநாதன்புரம் பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு முதல் அவரைக் கைது செய்ய இந்திய பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த கடத்தல்காரர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக பொய்யான தகவல்களை கூறி இலங்கையர்களை தமிழ்நாடு மற்றும் பெங்களூரு வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளதை இந்திய பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 இந்தியர்களை இந்திய தேசிய புலனாய்வு முகமை இதற்கு முன்னர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
October 25, 2023
Rating:


No comments:
Post a Comment