சாய்ந்தமருது லீடர் அஸ்ரபின் சர்வதேச ஆசிரிய தின விழா : ஓய்வுபெற்ற மூத்த மூன்று அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வும், அதிபர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பும் பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை முதல்வர் எம். ஐ.சம்சுதீன் தலைமையில் இன்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நீண்ட நாள் அதிபராக கடமையாற்றிய முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ. பஷீர், சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய கல்வி எழுச்சிக்கு பிரதான பங்கு வகித்த முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத், கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி முன்னாள் அதிபரும், நாடறிந்த மூத்த இலக்கியவாதியும், ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது ஆகியோர் பிரதான அதிதிகளாக பாடசாலை சமூகத்தினால் அழைக்கப்பட்டு அவர்களின் கல்வி சேவையை பாராட்டி விசேட கௌரவிப்பு இடம்பெற்றது.
மேலும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள்
உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான ஊடகவியலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் பிராந்தியத்திற்கு வழங்கி வரும் சமூக, ஊடக சேவைகளை கௌரவித்து பாடசாலை முகாமைத்துவத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர் எம்.எஸ்.எம். சுஜான், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அவர்களின் சேவை நலன் பாராட்டி அதிதிகளினால் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது லீடர் அஸ்ரபின் சர்வதேச ஆசிரிய தின விழா : ஓய்வுபெற்ற மூத்த மூன்று அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்
Reviewed by Author
on
October 10, 2023
Rating:
Reviewed by Author
on
October 10, 2023
Rating:













No comments:
Post a Comment