முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (10.10.2013) காலை 8.30 மணியளவில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நினைவு கூரப்பட்டுள்ளது.
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சமூக செயற்பாட்டாளர் சகீலா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் க.தவராசா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர்களான ஜூட்சன், பீற்றர் இளஞ்செழியன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
Reviewed by Author
on
October 10, 2023
Rating:

No comments:
Post a Comment