டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி வனீவ்னா தங்சத்தியன் ரப்ஹப் (ரீனா) இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம்.
டயக்கோனியா அமைப்பின் ஆசியப் பிராந்தியத்தின் ஐந்து நாடுகளுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி திருமதி வனீவ்னா தங்சத்தியன் ரப்ஹப் (ரீனா) கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் அழைப்பின் பேரில் 2023.11.02.ம் திகதி பாடசாலைக்கு வருகை தந்தனர்.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ( MWRAF) , மற்றும் டயகோனியா அமைப்பின் ஆதரவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட சிறுவர் சமாதான பூங்கா, மற்றும் பாடசாலையின் ஒரு பகுதியாக இயங்கி வரும் "கிரீன்வீச்" ஆங்கில பாலர் பாடசாலை போன்றவற்றையும் பார்வையிட்டதோடு, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் பற்றியும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் டயக்கோனியா நிறுவனத்தின் இலங்கைக்கான செயற்திட்ட முகாமையாளர் திருமதி நிஷாந்தினி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி வனீவ்னா தங்சத்தியன் ரப்ஹப் (ரீனா) இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு விஜயம்.
Reviewed by Author
on
November 03, 2023
Rating:

No comments:
Post a Comment