அண்மைய செய்திகள்

recent
-

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு இலகு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறை!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிலாளர் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த “Essential Soft Skills for Management Assistants and Allied Grade Staff” என்ற தொனிப்பொருளிலான பயிற்சி பட்டறை ஒன்று காஞ்சிரங்குடா கால்நடை வளர்ப்பு விவசாய பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் பேராசிரியர் சல்பியா உம்மா தலைமையில் இடம்பெற்றது.


ஊழியர்கள் தங்களது கருமங்களை இலகுவாக ஆற்றுவதற்கான பல்வேறு யுக்திகளை பயிற்சி பட்டறையின் வளவாலர்களாக கலந்துகொண்ட பேராசிரியர் எம்.சி.ஏ. நாசர், மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா ஹசன் எம்.ஜி. கலாநிதி எம்.ஐ. நௌபல் ஆகியோர் எடுத்துக் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் 50 பேர் குறித்த வதிவிட பயிற்சி பட்டறையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். தொடர்ச்சியாக அலுவலக கடமைகளில் ஈடுபட்டு வருவதால் ஏற்படும் சோர்வு நிலை போக்கி ஊழியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடியதால் தாங்களிடையே அன்னியோன்யம் மேலும் அதிகரித்துள்ளதாக இங்கு கலந்து கொண்ட ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். குறித்த பயிற்சி பட்டறையில் தான் பல்வேறு புதிய விடையங்களை அறிந்து கொண்டதாகவும் இவ்வாறான பயிற்சி நிகழ்வுகள் இன்னும் இடம்பெறவேண்டும் என்றும் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்திருந்த பேராசிரியர் சல்பியா உம்மா உள்ளிட்ட அணியினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இன்னும் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

நூருல் ஹுதா உமர்









தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு இலகு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறை! Reviewed by NEWMANNAR on December 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.