அண்மைய செய்திகள்

recent
-

உலகில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முறையான கல்வித்திட்டம் அவசியம் : பாடசாலை திறப்பு விழாவில் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு.

 உலகில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முறையான கல்வித்திட்டம் அவசியம் : பாடசாலை திறப்பு விழாவில் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு.



கிழக்கு மாகாண சபை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துறையப்பா நவரத்னராஜா அவர்களின் புதல்வியும், குருகுல இல்லத்தின் இஸ்தாபகரான கைலாசம்பில்லை ஐயா அவர்களின் பேத்தியுமான திருமதி நவரத்னராஜா தீபா அவர்களை முதல்வராக கொண்ட ஆலையடிவேம்பு ப்ளூசூம் முன்பள்ளி பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது 


கிழக்கு மாகணசபை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துறையப்பா நவரத்னராஜா அவர்களின் அழைப்பின் பெயரில் கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப்பாடசாலையை திறந்துவைத்தார் 


பாடசாலையை திறந்து வைத்து இங்கு உரையாற்றிய கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், உலகில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முறையான கல்வித்திட்டம் அவசியம். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்யும் வகையில் மாணவர்களின் அடித்தளம் பலமாக கட்டியமைக்கப்படல் வேண்டும் என்றார். 

மேலும் அம்முயற்சியினை பலவருட அனுபவம் கொண்ட ஆசிரியைகள் இங்கு காணப்படுவதனால் அதனை முறையாக கட்டியமைப்பார்கள் என நம்புகின்றேன் என தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துறையப்பா நவரத்னராஜா, கைலாசம்பிள்ளை ஐயா, முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் அதிகாரிகள், கல்விப் பணிமனை அதிகாரிகள் மற்றும் பெற்றோகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்









உலகில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முறையான கல்வித்திட்டம் அவசியம் : பாடசாலை திறப்பு விழாவில் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு. Reviewed by வன்னி on January 23, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.